கணவனுடன் சண்டை: மனைவி எடுத்த மோசமான முடிவு
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், கணவன் மனைவிக்கிடையிலான சண்டையால், அப்பாவிக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கணவனுடன் சண்டை, மனைவி செய்த செயல்
பெங்களூருவில் லோகேஷ், சந்திரிகா என்னும் தம்பதியர் வாழ்ந்துவந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தம்பதியருக்குள் நிதி நிலைமை மற்றும் சில விடயங்கள் தொடர்பில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுமாம்.
இந்நிலையில், நேற்றும் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் லோகேஷ் வேலைக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் லோகேஷை மொபைலில் அழைத்த சந்திரிகா, தான் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக வீட்டுக்கு விரைந்த லோகேஷ், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், தம்பதியரின் மகளான ஒன்றரை வயதுள்ள சார்வி உயிரிழந்துவிட்டாள். சந்திரிகாவின் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மகளைக் கொன்றதற்காக சந்திரிகா மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், அவர் விசாரணைக்குட்படுத்தப்படும் அளவுக்கு உடல் நலமடைவதற்காக காத்திருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |