பிரித்தானியாவில் கருக்கலைப்பதற்காக விஷம் வாங்கிய இளம் தாயார்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் முதல் கொரோனா ஊரடங்கின் போது தனது குழந்தையை கருக்கலைப்பதற்காக விஷம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கருக்கலைப்புக்காக விஷம்
பிரித்தானியாவில் Eaglescliffe பகுதியை சேர்ந்த 22 வயது பெத்தானி காக்ஸ் என்பவரே, கருக்கலைக்க விஷம் வாங்கியவர். அவர் மீது குழந்தையை அழிக்க முயன்றது, தனது கருக்கலைப்புக்காக விஷம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தமது பிறந்த திகதி, முகவரி உட்பட அடிப்படை தரவுகளை உறுதி செய்த அவர் மீது சட்ட விரோதமாக தமது கருக்கலைப்புக்கு முயற்சி மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
@Alamy
இங்கிலாந்தில் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், தமது குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்த முயன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், காக்ஸுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டதுடன் ஆகஸ்ட் 14 அன்று டீசைட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.
28 மாதங்கள் சிறை தண்டனை
கடந்த மாதம், சட்டப்பூர்வ வரம்பிற்கு உட்பட்டு கருக்கலைப்பை முன்னெடுப்பதற்காக மருந்துகளை வாங்கியதாக கூறி பெண் ஒருவர் 28 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
3 பிள்ளைகளின் தாயாரான அந்த பெண் தபால் மூலமாக மருந்துகளை பெற்றுள்ளார். கொரோனா காலகட்டத்தில் கருவுற்று 10 வாரங்கள் வரையில், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் வகையில் தபால் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், 44 வயதான அந்த தாயார் தாம் 28 வார கர்ப்பிணி என்பதை மறைத்து, கருக்கலைப்புக்கான மருந்துகளை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது.
மட்டுமின்றி, தெரிந்தே அவர் விதிகளை மீறியுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளால் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |