இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.. வைரலாவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம்
AIR 23 உடன் தனது இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் தபஸ்யா பரிஹாரை பற்றி பார்க்கலாம்.
அவரை பற்றிய தகவல்கள்
ஐ.ஏ.எஸ். தபஸ்யா மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை விஸ்வாஸ் பரிஹார் ஒரு விவசாயி, அவரது பாட்டி நரசிங்பூர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.
தனது சொந்த ஊரான நரசிங்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார் தபஸ்யா . பின்னர் சட்டம் பயின்று, புனேவில் உள்ள இந்திய சட்ட சங்க சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படிப்பை முடித்தார். இதையடுத்து, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) தேர்வை எழுத முடிவு செய்தார்.
UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தபஸ்யாவின் பயணம் எளிதான ஒன்றல்ல. பயிற்சி எடுத்த போதிலும், முதல் முயற்சியிலேயே தோல்வியை சந்தித்தார்.
இதையடுத்து, இரண்டாவது முயற்சியில் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு சுய படிப்பை நம்பியிருந்தார் தபஸ்யா. 2017 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 23வது இடத்தைப் பிடித்தார்.
தற்போது, ஐஏஎஸ் தபஸ்யா பரிஹார் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ளதாக அவரது LinkedIn சுயவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். தபஸ்யா தனது திருமணத்தின் போது இந்திய வனத்துறை (IFS) அதிகாரி கர்விட் கங்வாரை மணந்தபோது வைரலானார்.
டிசம்பர் 2021 இல் இவர்களின் திருமணம் ஒரு சிறப்பு காரணத்திற்காக கவனத்தை ஈர்த்தது. பாரம்பரிய "கன்யாதான்" விழாவில் பங்கேற்க தபஸ்யா மறுத்தது தான் அதற்கு காரணம்.
கன்யாதான் என்பது இந்து திருமணங்களில், தந்தை மணமகளை மணமகனிடம் ஒப்படைப்பார், இது பொறுப்பை மாற்றுவதைக் குறிக்கிறது.
விழாவின் போது, தபஸ்யா தனது தந்தையிடம் "நான் கொடுக்கப்பட வேண்டிய பொருள் அல்ல" என்று கூறி இந்த வழக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தார். இது தான் அவர் வைரலாவதற்கு காரணம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |