பிரித்தானிய ராஜ குடும்பத்து உறுப்பினரால் கோமா நிலைக்கு சென்ற லண்டன் பெண்
பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி சோஃபி வெசெக்ஸ் பாதுகாப்புக்கு சென்ற பொலிஸ் அணிவகுப்பில் சிக்கி படுகாயமடைந்த பெண் ஒருவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோமா நிலையில் இருப்பதாக குடும்பம்
சோஃபி வெசெக்ஸ் பயணப்பட்ட வாகனத்திற்கு பாதுகாப்பு அணிவகுப்பு மெற்கொண்ட பொலிஸ் வாகனம் மோதியதில் 81 வயதான ஹெலன் ஹாலண்ட் படுகாயமடைந்தார்.
Picture: family handout
கடந்த புதன்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3.30 மணியளவில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. படுகாயமடைந்த ஹெலன் ஹாலண்ட் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட, அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வயதில் மிக மோசமாக காயம்பட்டுள்ளது தங்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளதாக ஹெலன் ஹாலண்ட்டின் பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஹெலன் ஹாலண்ட் தமது சகோதரியை சந்திக்க சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கியுள்ளார். இதனிடையே, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட தகவலில், விபத்தில் சிக்கிய பெண்மணி தொடர்பில் சோஃபி வெசெக்ஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறார் எனவும், அவருக்கு இந்த சம்பவத்தில் உண்மையான அக்கறை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Image: Matt Capon
சம்பவத்தின் போது சோஃபி வெசெக்ஸ் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் வருவதை சற்றும் எதிர்பார்க்காத ஹெலன் ஹாலண்ட் சாலையில் இறங்கியுள்ளார். ஆனால் கண்ணிமைக்கும் நொடியில் அந்த பாதுகாப்பு வாகனத்தில் ஒன்று மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது.
சோஃபி வெசெக்ஸ் மின்னல் வேகத்தில்
பல எண்ணிக்கையிலான பொலிஸ் வாகன பாதுகாப்புடன் சோஃபி வெசெக்ஸ் மின்னல் வேகத்தில் கடந்து செல்வதை பலர் நேரில் பார்த்துள்ளனர். குறித்த பெண்மணி அதிர்ஷ்டம் காரணமாகவே உயிர் தப்பியிருக்கிறார் எனவும்,
அந்த பகுதி சாலையானது எப்போதுமே பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது, கவுன்சில் நிர்வாகத்திடம் இது தொடர்பில் புகார் அளித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Image: 2022 Max Mumby/Indigo
மட்டுமின்றி, இப்பகுதியில் சாலை விபத்தில் சிக்கி இதுவரை மூவர் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்த சந்திப்பில் சாரதிகள் கொஞ்சம் பொறுமையாக தங்கள் வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.