கணவன் வேலைக்கு சென்ற பின்னர் தனது அறை கதவை மூடி கொண்டு தூக்கில் தொங்கிய ஷிவானி! அழகிய பெண் எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் திருமணமான ஒன்றரை ஆண்டில் ஷிவானி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவருக்கும் ஷிவானி (22) என்ற பெண்ணுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட உட்கார்ந்ததாகவும், அப்போது ஷிவானியின் சமையல் பிடிக்கவில்லை என்று மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து நாகராஜன் பணிக்கு புறப்பட்டு சென்று விட்டார். அதன்பிறகு ஷிவானி தன் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டதாகவும், வெகு நேரம் வெளியே வரவில்லை என்றும் தெரிகிறது.
அதைத்தொடர்ந்து நாகராஜன் குடும்பத்தினர் ஷிவானி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அவர்கள் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஷிவானி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஷிவானி இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி ஷிவானியின் தாயார் பொலிசில் கொடுத்த புகாரில் திருமணத்தின் போது வரதட்சணையாக 95 பவுன் நகை போட்டு, ரூ.5 லட்சம் ரொக்கம் கொடுத்தோம்.
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் ஷிவானி கர்ப்பம் அடைந்தார். திடீரென்று கரு கலைந்து விட்டது. அதற்கு என் மகள் தான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் குற்றம் சாட்டி பேசி, கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தான் எங்கள் மகள் இறந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசாரும், கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
