பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூர பெண்.. விசாரணையில் அளித்த வாக்குமூலம்
பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்த சக மாணவியின் தாய் வாக்குமூலம்
தன் மகளை விட நன்றாக படித்ததால் மாணவனை கொல்ல எலி மருந்தை கலந்ததாக தெரிவித்த சகாயராணி விக்டோரியா
காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொன்ற சக மாணவியின் தயார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பள்ளி மாணவன் பால மணிகண்டன்(13), குளிர்பானம் குடித்தவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவனின் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சகாயராணி விக்டோரியா பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன் மகளை விட பால மணிகண்டன் நன்றாக படித்து வந்ததால் அவருக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.