கணவனை பழி வாங்குவதற்கு மனைவி செய்த விபரீத செயல்! என்ன செய்தார் தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்து போன கணவன்
இந்தியாவில் கணவனை பழிவாங்குவதற்காக, மனைவி அவருடைய ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 வயது இளம் பெண், 30 வயது மதிக்கத்தக்க நபரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இருப்பினும், கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த அப்பெண், அவரை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் பெயரில் பல அக்கவுண்ட்களை ஓபன் செய்துள்ளார்.
அதன் பின், அதில் கணவனின் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். திருமணம் ஆன புதிதில், கணவனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவர் மட்டும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவன் உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பின் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரைக் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொலிசார் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.