கமலா ஹரிஸின் இந்தியப் பின்னணி குறித்து மோசமாக விமர்சித்துள்ள பெண்: கடும் கண்டனம்
ட்ரம்ப் ஆதரவாளரான பெண் ஒருவர், கமலா ஹரிஸின் இந்தியப் பின்னணி தொடர்பில் அவரை மோசமாக விமர்சித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தியப் பின்னணி குறித்து மோசமாக விமர்சித்துள்ள பெண்
ட்ரம்ப் ஆதரவாளரான லாரா லூமர் (Laura Loomer) என்னும் பெண், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸின் பின்னணி குறித்து சமூக ஊடகமான எக்ஸில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
If @KamalaHarris wins, the White House will smell like curry & White House speeches will be facilitated via a call center and the American people will only be able to convey their feedback through a customer satisfaction survey at the end of the call that nobody will understand. https://t.co/EebUiKKxVw
— Laura Loomer (@LauraLoomer) September 8, 2024
அதில் லாரா, (இந்திய பின்னணி கொண்டவரான) கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால், வெள்ளை மாளிகையில் கறி வாசனைதான் வீசும்.
கால் சென்டர் மூலமாகத்தான் வெள்ளை மாளிகை அறிக்கைகள் வெளியாகும், அத்துடன், அமெரிக்க மக்கள் நுகர்வோர் ஆய்வு ஒன்றின் மூலமாகத்தான் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கமுடியும். கடைசியில் அவர்கள் கூறும் பதில் யாருக்கும் புரியாது என்று கூறியுள்ளார்
எழுந்துள்ள கடும் கண்டனம்
லாராவின் கருத்துக்கு அமெரிக்காவிலேயே கடும் கண்டனம் உருவாகியுள்ளது. Marjorie Taylor Greene என்னும் அரசியல்வாதி, லாராவின் கருத்துக்கள் பயங்கரமான இனவெறுப்பு கருத்துக்கள் என்று கூறியுள்ளார்.
அத்துடன், இணையவாசிகள் பலரும் லாராவை கடுமையாக கண்டித்துள்ளார்கள். லாராவின் கருத்துக்கள் இனவெறுப்பு கருத்துக்கள் என்றும், அவை ட்ரம்பின் கருத்துக்கள் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளார்கள்.
This is appalling and extremely racist. It does not represent who we are as Republicans or MAGA.
— Marjorie Taylor Greene ?? (@mtgreenee) September 11, 2024
This does not represent President Trump.
This type of behavior should not be tolerated ever. @LauraLoomer should take this down. https://t.co/z9s5fZlgQi
உங்கள் கருத்துக்களில், உங்கள் இனவெறுப்பு வெளியாவது தெரிகிறது என்று கூறியுள்ள ஒருவர், ட்ரம்ப் தேர்தலில் தோற்பதற்கு உங்களைப்போன்றவர்களும் காரணமாக அமையப்போகிறீர்கள் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |