பிரித்தானியாவில் மனைவியை 200 துண்டுகளாக வெட்டி நதியில் வீசிய கொடூர கணவன்
பிரித்தானியாவில், தன் மனைவியைக் கொன்று 200 துண்டுகளாக வெட்டி வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியை 200 துண்டுகளாக வெட்டிய கணவன்
இங்கிலாந்திலுள்ள Lincoln என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிக்கோலஸ் (Nicholas Metson, 28) என்னும் நபர், தன் மனைவியான ஹாலியை (Holly Bramley, 26) கத்தியால் குத்திக்கொன்று, அவரது உடலை குளியல் தொட்டியில் போட்டு, சுமார் 200 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
பின்னர் தன் நண்பரான ஜோஷுவா (Joshua Hancock) என்பவருக்கு 50 பவுண்டுகள் கொடுத்து, அவரது உதவியுடன் தன் மனைவியின் உடல் பாகங்களை Witham நதியில் வீசியுள்ளார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி ஹாலியின் உடல் பாகங்களில் 223 பாகங்கள், வெவ்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கவர்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
தாய் கூறியுள்ள தகவல்
இந்நிலையில், நிக்கோலஸ் தன் மகளைக் கொண்டுவிடுவார் என தனக்குத் தெரியும் என்றும், தான் பலரிடம் அதைக் கூறியதாகவும், என்றாலும், அதை யாராலும் தடுக்கமுடியவில்லை என்றும் கூறியுள்ளார் ஹாலியின் தாயான ஆனட் (Annette Bramley, 65).
ஹாலிக்கு திருமணம் ஆனதிலிருந்து, தன் மகள் தங்களை சந்திக்கவே இல்லை என்று கூறும் ஆனட், நிக்கோலஸ் செல்லப்பிராணிகளை தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்வது போன்ற கொடூர பழக்கம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
நிக்கோலஸுக்கு, குறைந்தது 19 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |