சைக்கிளில் 487 கிலோமீட்டருக்கு பயணம்.., பவன் கல்யாணை பார்க்க வரும் பெண் ரசிகை
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணை சந்திப்பதற்காக பெண் ஒருவர் 487 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் தனியாக செல்கிறார்.
பெண் ரசிகை
இந்திய மாநிலமான ஆந்திரா, கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.பவன் கல்யாணின் தீவிர ரசிகையாக இவர் அவருடைய கட்சியிலும்உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் தான், பவன் கல்யாணை சந்திப்பதற்கு சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும் ராஜேஸ்வரி முடிவு செய்தார். கர்னூலில் இருந்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு 487 கிலோமீட்டர் தூரம் உள்ள நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அந்தவகையில், நேற்று பவன் கல்யாணை சந்திக்க சைக்கிள் பயணத்தை ராஜேஸ்வரி தொடங்கினார். அப்போது, சைக்கிளின் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் வைத்திருந்தார்.
தனியாக சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. மேலும், ஜனசேனா கட்சி மகளிர் பிரிவு சார்பில் ராஜேஸ்வரி படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்ததோடு கட்சி அலுவலகம் வரும்போது அவருக்கு மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |