சுவிஸ் குடியுரிமை நேர்காணலில் பெண் அளித்த பதில்: நிராகரித்த அதிகாரிகள்
Woman denied citizenship for naming skiing as a Swiss sport: சுவிஸ் குடியுரிமை நேர்காணலின்போது, பெண்ணொருவர் சுவிட்சர்லாந்தின் விளையாட்டு, பனிச்சறுக்கு என பதிலளித்ததால் அவரது குடியுரிமை நிராகரிக்கப்பட்டது.
சுவிஸ் குடியுரிமை நேர்காணலின்போது, பெண்ணொருவர் விளையாட்டு தொடர்பில் அளித்த பதிலால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பெண் அளித்த பதில்
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் வாழ்ந்துவரும் துருக்கி நாட்டவரான ஒரு பெண்ணிடம், முனிசிபல் அதிகாரிகள் குடியுரிமை தொடர்பான நேர்காணலின்போது, சுவிஸ் விளையாட்டு ஒன்றின் பெயரைக் கூறுமாறு கேட்டுள்ளார்கள்.

அந்தப் பெண், பனிச்சறுக்கு என்று பதிலளிக்க, அதிகாரிகள், பனிச்சறுக்கு விளையாட்டு ஆஸ்திரியாவிலும் உள்ளது என்று கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்கள்.
மேல்முறையீடு அந்தப் பெண் தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
அவரது வழக்கை விசாரித்த மாகாண அதிகாரிகள், அவரது நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடுமையானவை என விமர்சித்துள்ளார்கள்.
அந்தப் பெண் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றதுடன், மொழித்தகுதி போன்ற பிற விடயங்களிலும் தகுதி பெற்றுள்ளார்.
ஆக, பனிச்சறுக்கு சுவிஸ் விளையாட்டு என்று கூறியதில் தவறில்லை என்றும் கூறியுள்ள மாகாண அதிகாரிகள், அந்தப் பெண்ணின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, முனிசிபல் அதிகாரிகள், தாங்கள் மாகாண அரசின் தீப்புக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, அந்தப் பெண் சுவிஸ் குடியுரிமை பெற தடையேதும் இல்லை என முடிவாகியுள்ளது.