தொல்லை பிடித்தவர் என பெயர் எடுத்ததால் இரண்டு முறை சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்: ஒரு சுவாரஸ்ய செய்தி
சுவிஸ் குடியுரிமை கோரி விண்ணப்பித்த ஒரு பெண்ணின் விண்ணப்பம் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது.
அதற்குக் காரணம், அவர் ஒரு தொல்லை பிடித்த பெண் என பெயர் எடுத்துள்ளதுதான்!
நெதர்லாந்தில் பிறந்தவர் நான்சி (Nancy Holten). ஆனால், தன் வாழ்வின் பெரும்பகுதியை அவர் சுவிட்சர்லாந்தில்தான் செலவிட்டுள்ளார். ஒரு எட்டு வயது சிறுமியாக இருக்கும்போது சுவிட்சர்லாந்துக்கு வந்த நான்சி, Aargau மாகாணத்திலுள்ள Gipf-Oberfrick என்ற இடத்தில் இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவருகிறார்.
நான்சியின் பிள்ளைகள் இருவரும் சுவிஸ் குடிமக்கள். ஆனால், நான்சிக்கு சுவிஸ் குடியுரிமை கிடைப்பது எளிதான விடயமாக இருக்கவில்லை. ஒருமுறை அல்ல, இருமுறை விண்ணப்பித்தும், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வெளிநாட்டவர் ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதை, அவர் வாழும் மாகாணம் மற்றும் முனிசிபாலிட்டியின் மக்களும் முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்தினரும் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தைப் பார்த்து அதற்கு வாக்களிக்கவேண்டும்.
நான்சி ஒரு வேகன். ஆகவே, மாடுகளின் கழுத்தில் மணி கட்டுதல், வேட்டையாடுதல் போன்ற விடயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராக இருக்கிறார் நான்சி. ஆனால், சுவிஸ் மக்களோ அவர் கூறுவனவற்றை சுவிஸ் பாரம்பரியத்து எதிரானதாக பார்க்கிறார்கள்.
image - CEN
அவர் ஒரு வாயாடி, தொல்லை பிடித்தவர், சலிப்பை ஏற்படுத்துபவர் என்கிறார்கள் அவர் வாழும் கிராமத்திலுள்ள மக்கள். பப்ளிசிட்டிக்காக பாரம்பரியங்களை அவமதிக்கிறார் என்கிறார்கள் அவர்கள்.
ஆகவேதான் இரண்டு முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தும் அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.
ஆனாலும்,போராடி குடியுரிமை வாங்கிவிட்ட நான்சி, விலங்குகள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்!
Photo: Nancy Holten