மூட்டை பூச்சிகளை சமாளிக்க பெண் வைத்த விஷம்... பரிதாபமாக பலியான லண்டன் சிறுமி
கிழக்கு லண்டனில் பெண் ஒருவர் தமது குடியிருப்பில் மூட்டை பூச்சிகளை சமாளிக்க வைத்த விஷம், அண்டைவீட்டு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது.
கொலைக்கு தாம் காரணமல்ல
குறித்த விவகாரத்தில், அந்த 11 வயது சிறுமியின் கொலைக்கு தாம் காரணமல்ல என்று அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். கிழக்கு லண்டனில் குடியிருக்கும் 33 வயதான Jesmin Akter என்பவரே தமது குடியிருப்பில் மூட்டை பூச்சிகளை சமாளிக்கும் பொருட்டு வீட்டைச் சுற்றி விஷம் வைத்துள்ளார்.
Picture: Central News
இதன் பொருட்டு கடந்த 2021 நவம்பர் 26ம் திகதி இத்தாலியில் இருந்து இணையமூடாக aluminium phosphide என்ற ரசாயனத்தை வாங்கியுள்ளார். ஆனால் குறித்த ரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அக்தர் அந்த ரசாயனப் பொருளின் துகள்களை வீட்டைச் சுற்றி சிதறடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அலுமினியம் பாஸ்பைடு, அபாயகரமான பாஸ்பைன் வாயுவை வெளியேற்றியதாக தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இந்த அபாயகரமான வாயுவானது அக்தரின் அண்டை வீட்டில் குடியிருந்த 11 வயது சிறுமியை பாதித்துள்ளது. சட்ட காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத அந்த 11 வயது சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதே ஆண்டு டிடம்பர் 11ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள அக்தர் இந்த வழக்கில் தாம் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். மேலும், ஜூலை 1 முதல் மூன்று வார கால விசாரணையை எதிர்கொண்டார். இரண்டாவது கட்ட விசாரணையானது எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதி Old Bailey நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |