கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியப் பெண்: காதலர் கைது

India
By Balamanuvelan Dec 06, 2025 07:51 AM GMT
Report

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்விந்தர் சிங். 2019ஆம் ஆண்டு, கனடாவில் வாழ்ந்துவந்த ரூபிந்தர் கௌர் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் குர்விந்தர்.

நாடுகடத்தப்பட்ட பெண்

திருமணத்துக்குப் பின் கனடா சென்ற ரூபிந்தர் கௌர், 2024ஆம் ஆண்டு கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஹர்கவல்பிரீத் சிங் என்னும் நபரும் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, கௌரின் கணவரான குர்விந்தர், தனது வீட்டின் கூரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

அதைத் தொடர்ந்து, குர்விந்தரின் சகோதரியான மன்வீர் கௌர், குர்விந்தரின் மனைவியான ரூபிந்தர் கௌர் மற்றும் அவரது காதலரான ஹர்கவல்பிரீத் சிங் ஆகியோர் மீது இந்திய பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

மன்வீரும் அவரது பெற்றோர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கனடாவில் வாழ்ந்துவருகிறார்கள்.

தன்னிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் தன் சகோதரரான குர்விந்தர், தன் மனைவி ரூபிந்தர் கௌர் குறித்து கூறிய சில விடயங்களை பொலிசில் தெரிவித்துள்ளார் மன்வீர். 

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியப் பெண்: காதலர் கைது | Woman Deported From Canada Partner Arrested

தான் விருப்பப்பட்டு குர்விந்தரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், கனடாவில் செட்டில் ஆகி வசதியாக வாழ்ந்துவந்த தன்னை தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும் அடிக்கடி குர்விந்தரிடம் புலம்பி வந்துள்ளார் ரூபிந்தர் கௌர்.

மேலும், தனது மனைவியான ரூபிந்தர் கௌர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டபோது, அதே நேரத்தில் நாடுகடத்தப்பட்டவரான ஹர்கவல்பிரீத் சிங்குக்கும், ரூபிந்தர் கௌருக்கும் தவறான உறவு இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் தன் சகோதரியிடம் தெரிவித்துள்ளார் குர்விந்தர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 28ஆம் திகதி தன்னை அழைத்த குர்விந்தர், தன் மனைவியும் அவரது காதலரும் சேர்ந்து தன்னைக் கொன்றுவிட்டு, தங்கள் நிலத்தை அபகரிக்க திட்டமிடுவதாகத் தெரிவித்ததாக கூறுகிறார் குர்விந்தரின் சகோதரியான மன்வீர்.  

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியப் பெண்: காதலர் கைது | Woman Deported From Canada Partner Arrested

அன்று இரவே, தன் சகோதரர் கொல்லப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ள மன்வீர், உடனடியாக இந்திய பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, குர்விந்தரின் மனைவியான ரூபிந்தர் கௌர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காதலர் என சந்தேகிக்கப்படும் ஹர்கவல்பிரீத் சிங் தலைமறைவாகிவிட்டார்.

காதலர் கைது

இந்நிலையில், பொலிசாரால் தேடப்பட்டுவந்த ஹர்கவல்பிரீத் சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியப் பெண்: காதலர் கைது | Woman Deported From Canada Partner Arrested

முதலில் தன் வீட்டில் திருட வந்தவர்கள் தன் கணவரிக் கொன்றுவிட்டதாக நாடகமாடியிருந்தார் ரூபிந்தர் கௌர். ஆனால், அவரது வீட்டுக்கு ஹர்கவல்பிரீத் சிங் வந்ததை குர்விந்தரின் உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.

ஆக, பொலிசார் முறைப்படி விசாரிக்கும்போது, தான் தன் கணவருக்கு விஷம் கொடுத்ததாகவும், தன் காதலரான ஹர்கவல்பிரீத் சிங் அவரைத் தாக்கியதாகவும், கழுத்தை நெறித்ததாகவும் ரூபிந்தர் கௌர் தெரிவித்துள்ளார். 

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியப் பெண்: காதலர் கைது | Woman Deported From Canada Partner Arrested

உண்மையில் குர்விந்தர் எப்படி உயிரிழந்தார் என்பது அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியானபிறகுதான் தெரியவரும்.

அதைத் தொடர்ந்து ரூபிந்தர் கௌர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவரது காதலரான ஹர்கவல்பிரீத் சிங்கையும், அவரது கூட்டாளியான வைஷவ்ஜீத் சிங் என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.  

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US