மதுபான விடுதியில் உணவருந்திய பெண்... குடும்பத்தினர் முன்னிலையில் சுருண்டு விழுந்து மரணம்
பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் மதுபான விடுதி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களுடன் காளான் உணவு சாப்பிட்ட நிலையில் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்களுடன்
பிரித்தானியாவின் Ferndown பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலேயே 24 வயதான Georgina Mansergh என்பவர் குடும்ப உறுப்பினர்களுடன் உணவருந்தியுள்ளார். இதில் அவர் சம்பவத்தின் போது காளான் உணவு சாப்பிட்டுள்ளார்.
Picture: BNPS
அதில் பயன்படுத்தப்பட்ட எள் விதை எண்ணெய் அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி 11ம் திகதி நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு அவரது தந்தை Nigel Mansergh தெரிவிக்கையில்,
தமது மகளுக்கு 2 வயது இருக்கும் போதே பருப்பு வகைகளால் ஒவ்வாமை இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார். ஆனால் விதைகளாலும் அவருக்கு ஒவ்வாமை ஏற்படுவதை பின்னர் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தமது மகள் தோலழற்சி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ள உணவு வகைகளை அவர் தவிர்த்து வந்ததாகவும், ஆனால், குறிப்பிட்ட சில உணவுகளை அவர் எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயநினைவின்றி சுருண்டு விழுந்து
விடுதியில் காளான் உணவு சாப்பிட்ட அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதும், தாயார் தமது மகளின் நிலை கண்டு உடனடியாக குடியிருப்புக்கு விரைந்து மறுமருந்து எடுத்துவர முயன்றுள்ளார்.
Picture: BNPS
ஆனால் அவர் திரும்பி வரும் நிலையில், ஜார்ஜினாவின் நிலை மோசமடைந்துள்ளதுடன், ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே, ஜார்ஜினா சுயநினைவின்றி சுருண்டு விழுந்துள்ளார்.
CPR உள்ளிட்ட முதலுதவிகள் அளிக்கப்பட்டும் பலனில்லாமல், இறுதியில் அந்த விடுதியிலேயே ஜார்ஜினாவின் உயிர் பிரிந்துள்ளது. இதுவரை அவருக்கு லேசான அறிகுறிகளே ஏற்பட்டுள்ளதால், உரிய மறுமருந்தினை எடுத்துச் செல்வதில்லை எனவும், தமது மகளின் இழப்புக்கு உணவகத்தை குற்றச்சாட்ட விரும்பவில்லை எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |