சாவிலும் பிரியாத தம்பதி! ஒரே குழியில் அடக்கம் செய்த மக்கள்
தமிழக மாவட்டம் வேலூரில் இறப்பிலும் இணை பிரியாத தம்பதிக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தி அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (85). மேஸ்திரி வேலை பார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் காலமானார்.
தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிய வந்தது. கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது மனைவி ராஜம்மாள் கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து அவரும் முத்துவின் உடல் அருகிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மரணத்திலும் பிரியாத முத்து - ராஜம்மாள் தம்பதிக்கு அப்பகுதி மக்கள் உரிய மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.
Photo source: Dailythanthi
மேலும், அவர்களை ஒரே குழியில் அடக்கம் செய்ய முடிவு செய்து, ஒரே வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நேற்று மாலை தம்பதியின் உடல்கள் சுடுகாட்டில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |