லண்டனில் மோதிய வேகத்தில் ரயில் தண்டவாளத்திற்கு பறந்து சென்று நொறுங்கிய கார்! பெண் பலி
லண்டனில் நடந்த கார் விபத்தில் பெண் உயிரிழப்பு
இரண்டு கார்கள் மோதி கொண்டதில் விபத்து என தகவல்
லண்டனில் இரண்டு கார்கள் மோதி கொண்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.48 மணிக்கு மணிக்கு மேற்கு லண்டனில் உள்ள பார்க் ராயல் ட்யூஒ ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
அப்போது ரேஞ்ச் ரோவர் காரும், டெல்சா காரும் மோதி கொண்ட நிலையில் ரேஞ்ச் ரோவரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதில் இருந்த மற்ற இருவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை.
Ben Cawthra/LNP
டெல்சா காரில் இருந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்ட போதும் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.
இதனிடையில் விபத்தில் சிக்கிய கார் மோதிய வேகத்தில் அருகே இருந்த இரயில் தண்டவாளத்தில் அப்பளம் போல நொறுங்கிய நிலையில் கிடந்ததை காண முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ, சாட்சிகள் இருந்தாலோ தங்களை தொடர்பு கொண்டு கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.