கனேடிய சாலையில் நடந்த பயங்கர விபத்து: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
கனடாவின் கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் கிழக்கு நோக்கிய கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில்(Gardiner Expressway) இன்று அதிகாலை வேளையில் சோகமான விபத்து நடந்தது.
ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan Avenue) அருகே இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 50 வயதான பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
துர்திஷ்டவசமாக, அந்தப் பெண் காயங்களால் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
40 வயது மற்றும் 20 வயது வயதுடைய மற்ற இரண்டு பெண்களும் கடுமையான காயங்களுக்கு ஆளாகினாலும், அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை.
விபத்து நேரத்தில் கார் சீட்டில் இருந்த சிறுமி மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
சாரதி கைது
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய சாரதியை டொராண்டோ காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரத்தில் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சாரதி மீது வழக்கு தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |