திருமணத்தில் நடனமாடிய பெண் அதிர்ச்சி மரணம்
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவர் நடனமாடியபோது மயங்கி விழுந்த இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜீவா.
இவர் செங்கல்பட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
அங்கு பாடல்கள் ஒலிக்க பலரும் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஜீவாவும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
பாதியிலேயே உயிரிழப்பு
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதியிலேயே ஜீவா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |