விளையாட்டு மைதானம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த 95 வயது மூதாட்டி
விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக 95 வயது மூதாட்டி ஒருவர் 5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார்.
5 ஏக்கர் நிலம் தானம்
இந்திய மாநிலமான ஒடிசா, நுவாபாட் மாவட்டம் அருகே உள்ள சிங்கஜார் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நிலாம்பர் மற்றும் சாவித்ரி மஜ்ஹி.
இவருடைய கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது சாவித்ரிக்கு வயது 95 ஆகிவிட்டது.
இவர், தான் பட்ட கஷ்டங்கள் சமூகத்தில் பிறருக்கு நடைபெற கூடாது என்பதற்காக அனைவருக்கும் சரியான முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்.
மேலும், இவருக்கு விளையாட்டிலும் ஆர்வம் உண்டு. இந்நிலையில், தனது வீட்டின் அருகே இருக்கும் சிறுவர்கள் கிரிக்கெட் உள்பட பிற விளையாட்டுகளை விளையாடுவதை பார்த்து ரசிப்பார்.
இதனிடையே, கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை தனியார் விளையாட்டு மைதானத்தில் நடத்துவார்கள்.
கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இந்நிலையில், கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக சாவித்ரி வழங்கினார்.
மேலும், அவர் வழங்கிய நிலத்தில் அரசு சார்பில் மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, கல்லூரி, கோவில் கட்டுவதற்கான தனது சொந்த நிலத்தை சாவித்ரி வழங்கியிருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |