தினமும் 3 கிளாஸ் சிறுநீர் குடித்து உயிர் வாழும் அமெரிக்க பெண்! இது தான் காரணமா?
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 3 கிளாஸ் சிறுநீர் குடிப்பதாக அவரே கூறிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Colorado பகுதியில் வசிக்கும் 53 வயதான பெண் ஒருவர் செய்து வரும் காரியம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தினமும் தனது சிறுநீரை தானே குடிக்கும் வினோத பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட பெண் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இளம் வயதில் தனது உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண சிறுநீரை குடிக்க ஆரம்பித்ததாகவும் தற்போது அது பிடித்துப்போக அந்த பழக்கத்தை இன்றுவரை கடைபிடிப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும் தனது சிறுநீர் தினம் தினம் புது சுவையை தருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க சிறுநீரை பயன்படுத்துவதாகவும் தனது முடி, பற்கள் ஆகியவை இதனால் வலுப்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 3 அல்லது நான்கு கிளாஸ் சிறுநீரை அந்த பெண் குடித்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.