ஆன்டி பர்னாமைத் தெரியும், மான்டி பர்னாம் யார் தெரியுமா?
பிரித்தானியாவின் புதிய பிரதமராகியுள்ள ஆன்டி பர்னாமைப் போலவே காட்சியளிக்கும் மற்றொரு பிரித்தானியர் இருக்கிறார்.
அவரை மான்டி பர்னாம் என்று அழைக்கிறார்களாம் மக்கள்!
மான்டி பர்னாம் யார் தெரியுமா?
வேல்ஸ் நாட்டிலுள்ள Swansea என்னுமிடத்தைச் சேர்ந்த பெண், எம்மா ராபர்ட்ஸ் (54).

எம்மா, சிற்றாலயம் ஒன்றின் போதகராக உள்ளார். விடயம் என்னவென்றால், எம்மா பார்ப்பதற்கு பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமைப் போலவே காட்சியளிக்கிறார். ஆகவே, இணையம் அவரை மான்டி பர்னாம் என்று அழைக்கிறதாம்.
தான் சமீபத்தில் தன் தாயுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஆன்டி பர்னாமைப்போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள் என்று கூற, நானும் அப்படித்தான் நினைக்கிறேன் என்று கூறினாராம் எம்மாவின் தாய்.
எம்மாவின் கணவரும் அவரை, ‘எங்கள் மான்டி, மக்களின் பெண்’ என்றே அழைக்கிறாராம்.
ஆன்டி பர்னாமைப்போலவே எம்மாவும் லேபர் கட்சி வாக்காளர், கால்பந்து முதல் பல விடயங்கள் இருவருக்கும் பொதுவான விருப்பம், அத்துடன், பிரித்தானியாவின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதுதான் இருவரின் விருப்பமும் கூட!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |