குப்பை கடையில் வாங்கிய நாற்காலி மூலம் பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஆச்சரியமூட்டும் பின்னணி
பிரித்தானியாவில் பெண் ஒருவர் வெறும் 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலியை சுமார் 16,250 பவுண்டுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் Brighton நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் குப்பை கடையில் இருந்து பழைய நாற்காலியை 5 பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளார். அந்த நாற்காலி நீண்ட வருடங்களாக அவரது வீட்டில் சும்மாவே கிடந்துள்ளது.
இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டுக்கு வந்த ஒருவர் இந்த நாற்காலியை பார்த்துள்ளார். அப்போது அந்த நாற்காலியின் பின் பகுதியில் 20ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது என்று பதிக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.
இதனால் ஆச்சர்யமடைந்த அவர் உடனே அது குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது கடந்த 1902ஆம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த Koloman Moser என்ற கலைஞர் இந்த நாற்காலியை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வாள்களை ஏலம் விடும் நிறுவனம் ஒன்று, சுமார் 16,250 பவுண்ட்ஸ் கொடுத்து அந்த நாற்காலியை வாங்கியுள்ளனர். 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலி பல லட்சத்துக்கு விலைபோனதால் அந்த பெண் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.