போதையில் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்: செய்த அட்டகாசம்
பிரித்தானியாவிலிருந்து தாய்லாந்து செல்லும் விமானம் ஒன்று, போதையில் தகராறு செய்த ஒரு பெண்ணால் பாதிவழியில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று, கடந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது.
போதையில் தகராறு செய்த பெண்
நேற்று முன்தினம் இரவு 9.55 மணிக்கு, பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பாங்காக் நோக்கி புறப்பட்டது விமானம் ஒன்று.
ஆனால், விமானத்தில் பயணித்த ஒரு பெண் குடிபோதையில் தகராறு செய்ததால், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி, அவரை விமானத்திலிருந்து இறக்கி விடுவதென முடிவு செய்தார் விமானி.
ஆகவே, விமானம் ஆஸ்திரியா நாட்டிலுள்ள வியன்னாவில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் பெண் செய்த அட்டகாசம்
விமானத்திலிருந்து அந்த பெண்ணும் அவரது கணவரும் இறக்கிவிடப்பட்டார்கள். பொலிசார் இருவரையும் விமானத்திலிருந்து வெளியேற்ற, அந்த பெண் கோபமடைந்தார்.
விமானத்திலிருக்கும்போதே, அந்தப் பெண்ணிடம் தன்னுடைய 5,000 பவுண்டுகள் பணம் இருப்பதாக அவரது கணவர் கூறியிருந்திருக்கிறார்.
விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும், கோபத்தில் அந்தப் பெண் அந்த பணத்தை தூக்கி வீசியுள்ளார். விமான ஓடுபாதையிலும், அருகிலும் பணம் கொட்டிக்கிடக்க, அந்தப் பெண்ணின் கணவரும் பொலிசார் ஒருவரும் அந்தப் பணத்தை சேகரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை விமானத்தில் பயணித்த ஆன்டி (63) என்பவர் வீடியோ எடுத்துள்ளார். பணம் காற்றில் பறந்த நிலையில், அவர்களால் எவ்வளவு பணத்தை மீட்க முடிந்தது என்பது தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |