மன்னர் சார்லசுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கிய பெண்: வெளியான வீடியோ
மன்னர் சார்லஸ் தன் மனைவி கமீலாவுடன் அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மன்னருக்கு வரவேற்பளித்த நிலையில், எதிர்பாராதவிதமாக, மன்னருக்கும் ராணிக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கினார் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
Image: Getty Images
வீடியோவில் பதிவான காட்சிகள்
மன்னரும் ராணியும் அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், பூர்வக்குடியினரான Lidia Thorpe என்னும் அவுஸ்திரேலிய சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர், திடீரென, நீங்கள் என் மன்னரல்ல என சத்தமிட்டார்.
WATCH: The King and Queen look on as Aboriginal Australian senator Lidia Thorpe shouts "You are not my King, you committed genocide against my people. "You destroyed our lands, this is not your land."
— Russell Myers (@rjmyers) October 21, 2024
The senator was criticised in 2022 was calling Queen Elizabeth II a coloniser pic.twitter.com/UZdGd3P1S9
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பாதுகாப்பு அதிகாரிகள் லிடியா என்னும் அந்தப் பெண்ணை அங்கிருந்து வெளியேற்ற முயல, அவரோ, நீங்கள் எங்கள் மக்களுக்கெதிராக இனப்படுகொலையை அரங்கேற்றினீர்கள்.
எங்கள் நிலத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், எங்களிடமிருந்து நீங்கள் திருடிய எல்லாவற்றையும் திருப்பிக் கொடுங்கள், எங்கள் எலும்புகள், எங்கள் மண்டையோடுகள், எங்கள் குழந்தைகள், எங்கள் மக்களை திருப்பிக் கொடுங்கள் என லிடியா சத்தமிடும் காட்சியை அந்த வீடியோவில் காணலாம்.
Image: POOL/AFP via Getty Images
அவர் சத்தமிட்டுக்கொண்டிருக்க, மன்னர் சார்லசும் ராணி கமீலாவுமோ, சற்றும் பதற்றமடையாமல், தங்கள் அருகே நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
2022ஆம் ஆண்டு, இதே லிடியா என்னும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர், தான் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, ராணி ஒரு காலனி ஆதிக்கவாதி என சத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.
Image: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |