எளிதாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரத்தில் 30 நிமிடங்கள் நரகவேதனை அனுபவித்த பெண்
சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம்
The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும், சார்க்கோ (Sarco) என்னும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
Image: AFP via Getty Images
ஆனால், அந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
30 நிமிடங்கள் நரகவேதனை அனுபவித்த பெண்
இயந்திரத்துக்குள் ஏறி படுத்துக்கொண்டு, கதவை மூடி, ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், நைட்ரஜன் வாயு வெளியாகி, அமைதியாக தூக்கத்தை ஏற்படுத்தும், தூக்கத்திலேயே உயிர் போய்விடும் என்றுதான் சார்க்கோ இயந்திரத்தை உருவாக்கிய The Last Resort நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
ஆனால், முதன்முறையாக அதைப் பயன்படுத்திய அமெரிக்கப் பெண்ணொருவர், சுமார் 30 நிமிடங்கள் நரகவேதனை அனுபவித்தே உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நெதர்லாந்து நாட்டு ஊடகம் ஒன்று, அந்தப் பெண் சார்க்கோ இயந்திரத்துக்குள் படுத்துக்கொண்டு பொத்தானை அழுத்தி ஒரு நிமிடம் 57 விநாடிகளில் அந்த இயந்திரத்துக்குள் இருந்த கமெரா இயங்கத் துவங்கிய நிலையில், அந்தப் பெண் துடிதுடித்து அவரது முழங்கால் அந்த இயந்திரத்தின் கண்ணாடியியில் மோதியதைக் காட்டுவதுபோல் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Image: AFP via Getty
3.50 மணிக்கு அந்தப் பெண் அந்த இயந்திரத்துக்குள் செல்ல, சுமார் 4.00 மணியளவில் அதை கண்காணிப்பதற்காக, அந்த யந்திரத்தை உருவாக்கியவரான Florian Willet வைத்திருந்த ஐபாடில் எச்சரிக்கை ஒலி ஒலிக்கத் துவங்கியுள்ளது.
அதாவது, அந்தப் பெண், இயந்திரத்திற்குள் சென்றபின், சுமார் ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, அவரது இதயத்துடிப்பைக் காட்டும் எச்சரிக்கை ஒலி அது.
ஆனால், அந்த ஒலி எதனால் ஏற்பட்டது என்பது புரியாமல் Florian Willet குழப்பிப் போயிருக்கிறார்.
ஆக, எளிதாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என விளம்பரம் செய்யப்பட்ட அந்த இயந்திரத்தில், அந்த அமெரிக்கப் பெண் 30 நிமிடங்கள் நரகவேதனை அனுபவித்தே பின் உயிரிழந்திருக்கக்கூடும் என வெளியாகியுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |