பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் ரூ. 1 கோடியை அள்ளிய இளம்பெண்! குப்பையில் இருந்து கொட்டும் பணம்
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பைகள் தயாரித்து பெண்ணொருவர் ரூ.1 கோடி வரை சம்பாதித்துள்ளார்.
கனிகா அகுஜா என்ற டெல்லி பெண் தான் இந்த ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளார். அவர் கூறுகையில், சிறு வயதில் குப்பைகள் கொட்டப்படும் இடத்துக்கு சென்று விளையாடுவேன். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை சிறு மலையாக பாவித்து அதில் ஏறி, இறங்கி விளையாடி மகிழ்வேன்.
அங்கு விளையாடினால் காயம் உண்டாகும் என்றும், நோய்த்தொற்று உண்டாகும் என்றும் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள். அங்கு விளையாட செல்லக்கூடாது என்றும் அறிவுரை வழங்குவார்கள். நோயைப் பரப்பும் குப்பைக் கழிவுகளை ஏன் குவிக்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
அந்தக் கேள்விதான், நான் வளர்ந்ததும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பொருட்கள் தயாரிக்கும் யோசனை உருவாக காரணமாக அமைந்திருக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பைகள், லேப்டாப் உறைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை தயார் செய்து இந்தியாவின் பல பகுதிகளில் விற்பனை செய்கிறோம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இதுவரை 12 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து வாலட்கள், பைகள், டேபிள் மேட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளோம்.
இதன் மூலம் கடந்த நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளோம். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பொருட்களை தயாரிக்க பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
thebetterindia