நீட் தேர்வில் தோல்வி அடைந்த பெண்ணிற்கு கல்லூரி முடிப்பதற்கு முன்பே ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை
நீட் தேர்வில் சாதிக்க முடியாத பெண்ணிற்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
ரூ.72.3 லட்சம் சம்பளம்
கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த தம்பதியினர் சரேஷ் மற்றும் கீதா. இவர்களுக்கு 20 வயதில் ரிதுபர்ணா என்ற பெண் ஒருவர் இருக்கிறார். இவருக்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஆனால், இவருக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இதற்காக நீட் தேர்வு எழுதியும் அதிக மதிப்பெண்கள் கிடைக்காததால் அதில் சாதிக்க முடியவில்லை.
பின்னர், விருப்பமே இல்லாமல் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளார். இதையடுத்து, தனது பாடப்பிரிவில் அதீத ஆர்வம் காட்டி ரோபோட்டிக்ஸ் மூலம் பாக்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாக வைத்திருந்தார்.
இதற்காக, கோவா INEX போட்டியில் கலந்து கொண்டு அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் மாதிரியை வழங்கி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை ரிதுபர்ணா வென்றார்.
பின்பு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்று தொடர்பு கொண்ட அவருக்கு முதலில் ஏமாற்றம் மட்டும் கிடைத்தது. இறுதியில் ஒரு சிறு பகுதி வேலை அவருக்கு வழங்கப்பட்டது.
முதலில் அவருக்கு வேலை புரியாமல் இருந்தாலும் தீவிர முயற்சி மற்றும் ஆராய்ச்சி மூலம் அதனை முடித்தார். சுமார் 8 மாதங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டார்.
பின்னர் அவர் கல்லூரி வகுப்புகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
கல்லூரி படிப்பு முடிந்ததும் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் டெக்சாஸ் பிரிவில் ரிதுபர்ணா சேரவுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |