நிச்சயம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய இளைஞர்- நடந்தது என்ன?
இந்திய மாநிலம் குஜராத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த பின், இளம்பெண் புகார் அளிப்பதாக மிரட்டியதால் 36 வயது நபர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமண நிச்சயதார்த்தம்
குஜராத் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த வருமான வரித்துறை பணியாளர் ஹரிராம் சத்யபிரகாஷ் பாண்டே (36).
நாசிக்கில் பணிபுரிந்து வந்த இவருக்கும், மோஹினி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அப்போது மோஹினி தனது காதலர் சுரேஷுடன் கட்டிபிடித்தபடி நெருக்கமாக இருந்ததை கண்டு ஹரி ராம் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வரதட்சணை புகார் அளிப்பேன்
பின்னர் அவர் அந்நபருடன் காதலை முறித்துக் கொண்டால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன், இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என ஹரிராம் மோஹினியிடம் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், உன் மீதும் உன் குடும்பத்தின் மீதும் வரதட்சணை புகார் அளிப்பேன் என மோஹினி மிரட்டியுள்ளார்.
இதனைக் கேட்டு ஹரி ராம் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் குடும்பத்தை நினைத்து மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹரி ராம் வீட்டில் யாரும் சமயத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஹரி ராமின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |