புத்தாண்டு தினத்தில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பிரித்தானியாவில் புத்தாண்டு தினத்தன்று, பெண் ஒருவர் ஓன்லைனில் ஆர்டர் செய்த உணவில் நத்தை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவரது காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்தார்.
இருவரும் தங்கள் ஆர்டர் செய்த வான்கோழி மற்றும் மாட்டிறைச்சி ரோஸ்ட் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, க்ளோ தனது உணவில் நத்தையைப் பார்த்ததாகவும், பயத்தில் உடனடியாக தனது உணவைத் துப்பியதாகவும் கூறினார்.
இது குறித்து க்ளோ வால்ஷா கூறுகையில்,
'நான் பொதுவாக அந்த உணவகத்திற்கே சாப்பிட செல்வேன். ஆனால் எனக்கு கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்ததால் நான் முதல் முறையாக அந்த உணவகத்திலிருந்து ஆர்டர் செய்தேன். இதற்கு முன் அந்த உணவகத்துடன் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.
நான் என் முட்கரண்டியில் சாப்பாடு எடுத்துக்கொண்டிருந்தேன், கொஞ்சம் பட்டாணி சாப்பிடலாம் என்று நினைத்தேன், பட்டாணியில் தோண்டினேன், அப்போதுதான் பார்த்தேன். நான் அதிர்ச்சியடைந்தேன், என் வாயில் உணவு இருந்தது, நான் உடனடியாக உணவை வெளியே துப்பினேன்.
அது நான் சாப்பிடவிருந்த பகுதியில் இல்லாமல், சற்று மேலே இருந்தது. அதுவரை மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
Picture: BPM Media
அவரும் அவரது காதலன் இருவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.
பின்னர் Uber Eats-ஐத் தொடர்பு கொண்ட பிறகு, அந்நிறுவனம் Chloe-க்கு 20.63 பவுண்டு ஆர்டருக்கான பணத்தை திருப்பிக் கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து, Toby Carvery உணவகம் மன்னிப்புக் கேட்டு Chloe-க்கு 40 பவுண்டு மதிப்புள்ள வவுச்சரை வழங்கியது. மேலும், அந்த உணவை விசாரணைக்காக திரும்பக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது.
ஆனால் Chloe, 'நான் மீண்டும் அங்கு செல்லமாட்டேன். நான் வழக்கமாக அங்கு தான் செல்வேன். ஆனால் இதற்கு பிறகு நான் திரும்ப செல்வேன் என்று நினைக்கவில்லை' என்று கூறினார்.
இதேபோல், கடந்த டிசம்பர் 20 அன்று ஸ்டோக்கில் உள்ள ஃபெஸ்டிவல் பார்க் டிரைவ்-த்ரூ மெக்டொனால்டில் இருந்து, 22 வயதான பிரிட்னி ஜான்சன் என்ற பெண் ஆர்டர் செய்த பர்கரில் ஒரு சிறிய நத்தை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
