நூடுல்ஸ் உணவில் மிதந்த கரப்பான் பூச்சி! Zomatoவில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி
Zomato-வில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த நூடுல்ஸ் உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூடுல்ஸ் உணவில் கரப்பான் பூச்சு
X பயனாளரான சோனாய் ஆச்சார்யா(Sonai Acharya) என்ற பெண் Zomato-வில் நூடுல்ஸ் ஒன்றை ஆர்டர் செய்து இருந்த நிலையில் அதில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Auntie Fug's உணவகத்தில் இருந்து ஜப்பானிய மிசோ ராமன் சிக்கன் நூடுல்ஸை Zomato மூலமாக சோனாய் ஆச்சார்யா ஆர்டர் செய்துள்ளார்.
Just had a horrific experience ordering from @Zomato. Ordered Japanese miso ramen chicken from Auntie Fug's and found a cockroach in my meal! Absolutely unacceptable and disgusting Seriously disappointed with the quality control here. @Zomato is beyond gross.#ZomatoNightmare pic.twitter.com/R3wleOfPpj
— Sonai Acharya (@sonai4u) February 14, 2024
ஆனால் உணவு பார்சல் வந்த பிறகு அதை பிரித்து பார்த்த சோனாய் ஆச்சார்யாவுக்கு அதிர்ச்சி ஏற்படும் விதமாக நூடுல்ஸ்ஸிற்குள் கரப்பான் பூச்சி ஒன்று கிடந்துள்ளது.
இதையடுத்து X தளத்தில் இது குறித்து பதிவிட்ட சோனாய் ஆச்சார்யா, Zomatoவில் ஆர்டர் செய்த எனக்கு பயங்கரமான அனுபவம் கிடைத்துள்ளது.
என் உணவில் கரப்பான் பூச்சி, இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன் உணவு தரக் கட்டுப்பாடுகள் முற்றிலும் மோசம் மற்றும் ஏமாற்றம் என்று பதிவிட்டு இருந்தார்.
Zomato பதில்
இந்நிலையில், சோனாய் ஆச்சார்யா பதிவுக்கு பதிலளித்துள்ள Zomato நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |