பிரித்தானிய பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக விழுந்த 7 லட்சம் பவுண்ட்ஸ்! பின்னர் நடந்தது என்ன?
பிரித்தானியாவில் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 7 லட்சம் பவுண்ட்ஸ் செலுத்தப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வங்கி கணக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7,74,839 பவுண்டுகள் தவறுதலாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணம் வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு செல்ல வேண்டிய பணம் என்று கூறப்படுகின்றது.
சுமார் 15 மாதங்களாக கவனிக்காத அதிகாரிகள் பின் பணம் காணாததை நோட்டமிட்டு கடைசியில் வேறு ஒருவரின் வங்கி கணக்கில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் உடனே சம்பந்தபட்ட பெண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் வங்கியில் இருக்கும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் தனக்கு டெபாசிட் ஆன பணத்தில் இருந்து 20,000 பவுண்டுகள் செலவழித்து விட்டதாகவும் அதுமட்டும் இல்லாமல் இவ்வளவு பணத்தை என்னால் திருப்பி கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கூறியதாவது, எனக்கு பணம் டெபாசிட் ஆன நாளில் இருந்து சம்மந்தப்பட்டவர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள் என்று பல மாதங்களாக காத்து இருந்தேன். இதற்கான வருமான வரி செலுத்திய போதும் யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட 7,74,839 பவுண்டுகளில் இருந்து செலவழிந்த 20,000 பவுண்டுகளை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022