ரூ 7,000 கோடி மதிப்பிலான சொந்த நிறுவனத்தில் இருந்தே வெளியே தள்ளப்பட்ட பெண்: ரூ 738 கோடி கேட்டு வழக்கு
நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை ஏற்படுத்தியதாக கூறி, ரூ 7,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனரையே வெளியேற்றியது நிர்வாகிகள் குழு.
சந்தை மதிப்பு ரூ 7,000 கோடி
கடந்த 2015ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட Zilingo என்ற நிறுவனம், தற்போது இந்தோனேசியா, ஹொங்ஹொங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
Zilingo நிறுவனத்தை Ankiti Bose என்பவர் Dhruv Kapoor என்பவரை பங்குதாரராக கொண்டு துவங்கியுள்ளார். இந்த நிறுவனமானது மிக குறுகிய காலத்திலேயே பெரும் வளர்ச்சியை கண்டது.
2019ல் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 7,000 கோடியை எட்டியது. இந்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார் Ankiti Bose. கடந்த 2018ல் போர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட 30 வயதுக்கு உட்பட்ட 30 தொழிலதிபர்களில் ஒருவராக Ankiti Bose தெரிவானார்.
2019ல் Fortune பத்திரிகை வெளியிட்ட 40 வயதுக்கு உட்பட்ட 40 தொழிலதிபர்களில் ஒருவராகவும் Ankiti Bose தெரிவானார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது சொந்த நிறுவனத்தில் இருந்தே Ankiti Bose வெளியேற்றப்பட்டார்.
தலைமை நிர்வாக அதிகாரி பதவி
தற்போது தமது நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான மகேஷ் மூர்த்திக்கு எதிராக ரூ 738 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். Zilingo நிறுவனத்தை வளர்த்து பல நாடுகளுக்கு கிளை பரப்ப வைத்தவர் Ankiti Bose.
இந்த நிலையில் தான் 2022ல் நிதி முறைகேடு மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வெளியான தகவலின் அடிப்படையில், நிர்வாகிகள் குழுவின் ஒப்புதல் இல்லாமல் தனது ஊதியத்தை 10 மடங்கு அதிகரித்ததாகவும், 10 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் முதலீட்டாளரான மகேஷ் மூர்த்தி என்பவர் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டு வருவதாகவும், அவர் ரூ 738 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், மன்னிப்பும் கோர வேண்டும் என்று Ankiti Bose வழக்கு தொடர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |