பிரித்தானியாவில் மதுபான பாரில் இருந்து மக்கள் வெளியேறிய போது இளம்பெண்ணிற்கு நடந்த பகீர் சம்பவம்!
லிவர்பூலில் சிட்டி சென்டரில் எடுக்கப்பட்ட சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்.
பொதுமக்கள் உதவியை நாடி வைத்துள்ள கோரிக்கை.
பிரித்தானியாவில் இரண்டு ஆண்களின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.
லிவர்பூல் சிட்டி சென்டரில் கடந்த 14ஆம் திகதி இளம்பெண் ஒருவர் நடந்து சென்ற நிலையில் அவரை இரண்டு ஆண்கள் பின் தொடர்ந்து வந்தனர், அப்பெண்ணை வெகுநேரமாகவே இருவரும் நகர் முழுவதும் பின் தொடந்து வந்திருக்கின்றனர்.
பின்னர் அப்பெண்ணை அவர்கள் அணுகிய போது அதில் ஒருவர் அப்பெண் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஜென்னி பெக் கூறுகையில், இது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஆண்களின் சிசிடிவி புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம்.
Merseyside Police
அவர்களிடம் விசாரித்தால் இது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என கருதுகிறோம். சிட்டி சென்டரின் பரபரப்பான பகுதியில் இது நடந்துள்ளது, அங்கு மக்கள் மதுபான பார்களை விட்டு வீடு திரும்பிய போது சந்த சம்பவம் நடந்திருக்கிலாம்.
அந்த இருவர் குறித்து எந்தவொரு தகவல் கிடைத்தாலும் எங்களை தொடர்பு கொண்டு கூறலாம் என தெரிவித்துள்ளார்.