பிரித்தானியாவில் ஈஸ்டர் வார இறுதியில் மர்ம முறையில் இறந்துகிடந்த பெண்
இங்கிலாந்தில் 48 பெண்ணொருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் சடலமாக
பர்மிங்காமில் உள்ள டைல் கிராஸ் பகுதியில், 48 வயதான பெண்ணொருவர் தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.
ஈஸ்டர் வார இறுதியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. அன்றைய தினமே 49 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சந்தேக நபர்
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் இதுகுறித்து கூறுகையில், ''Mulwych சாலையில் உள்ள அப்பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் கொடூரமாக சடலம் மீட்கப்பட்டது'' என்றனர்.
துப்பறியும் தலைமை ஆய்வாளர் லாரா ஹாரிசன் கூறும்போது, 'என்ன நடந்தது என்பதை சரியாக நிறுவ நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் அவரது மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு பதில்களை வழங்குகிறோம். சந்தேக நபருக்கு அப்பெண் தெரிந்தவர் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக வேறு யாரையும் நாங்கள் தற்போது தேடவில்லை' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |