பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் மாயம்: திடுக்கிடவைத்துள்ள தகவல்
Woman found dead in flat returned from UK without telling family: பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர், இந்தியாவில் வீடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜி நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் தேஷ்முக் (60).
அவினாஷின் மகளான முக்தா தேஷ்முக் (34), கடந்த ஆண்டு ஜூலை மாதம் MBA படிப்பதற்காக பிரித்தானியா சென்றார்.
கல்வி கற்கச் சென்ற இளம்பெண் மாயம்
இந்நிலையில், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 23ஆம் திகதி தன் தாயுடன் பேசியுள்ளார் முக்தா.

அப்போது, தான் அவசரமாக வேலை ஒன்றிற்கான இண்டர்வியூவுக்குச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார் முக்தா.
அதற்குப் பிறகு முக்தாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் லண்டனிலிருக்கும் முக்தாவின் தோழியான நிகிதா என்னும் பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளனார் அவரது பெற்றோர்.
நிகிதா லண்டன் பொலிசாரின் உதவியை நாட, அவர்கள் முக்தா ஆகத்து மாதமே இந்தியா சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்கள்.
திடுக்கிடவைத்துள்ள தகவல்
மகள் இந்தியா சென்றுவிட்டதாக லண்டன் பொலிசார் கூறியதால் அதிர்ச்சியடைந்த முக்தாவின் தந்தை, தன் மகளுடைய வங்கிப் பரிவர்த்தனைகளை பரிசோதித்துள்ளார்.
அப்போது, அக்டோபர் 8ஆம் திகதிக்கும் 25ஆம் திகதிக்கும் இடையில், முக்தா, ஸ்விக்கி, சொமாட்டோ, புக் மை ஷோ போன்ற ஆப்களை பயன்படுத்தியது தெரியவரவே, அவர் இந்தியாவிலிருப்பது உறுதியாகியுள்ளது.

உணவு ஆர்டர் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், புனேவிலுள்ள Gahunje என்னுமிடத்தில் முக்தா வீடொன்றை வாடகைக்கு எடுத்துள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று முன் தினம், அதாவது, வியாழக்கிழமையன்று அந்த வீட்டுக்குச் சென்ற பொலிசார், வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர். மாற்று சாவி கொண்டு வீட்டை பொலிசார் திறக்க, அதிரவைக்கும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது.
ஆம், வீட்டுக்குள் முக்தாவின் உயிரற்ற உடல், அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், மகள் இந்தியா வந்ததை தங்களிடம் சொல்லாமல் மறைத்தது ஏன், அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் முக்தாவின் பெற்றோர்!