கற்பை ஏலத்திற்கு வைத்த சுவிஸ் இளம்பெண்: அவர் கூறிய காரணம்
சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர் தமது கற்பை ஏலத்திற்கு வைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் இணைய பக்கத்தில் தமது கற்பை 500,000 பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் வைத்துள்ளார். ஆனால் இந்த கட்டணம் இறுதியானது எனவும் அவர் குறித்த இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
18 வயதேயான குறித்த இளம் பெண், தாம் ஒரு விலைமாதாக வேண்டும் எனவும், அதனால் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலன்பெற வேண்டும் எனவும் திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.
Eclosia என தம்மை அறிமுகப்படுத்தியுள்ள குறித்த பெண், பொருளாதார காரணங்களுக்காகவே தாம் இந்த முயற்சியில் ஈடுபடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், காதல், திருமண உறவில் தமக்கு தற்போது ஈடுபாடு இல்லை எனவும், காதலிக்கும் மன நிலையில் தாம் இல்லை எனவும்,
இதனால் கிடைக்கும் தொகையில் இயற்கைக்கு உதவும் வகையில் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் Eclosia தெரிவித்துள்ளார்.
இதுவரை தமக்கு 108 மின் அஞ்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதில் நான்கு பேர்கள் மட்டுமே முறைப்படி தம்மை அணுகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.