சகோதரனின் திருமணத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் பிரித்தானியாவிலிருந்து வந்து அதிர்ச்சி கொடுத்த இந்திய பெண்!
இந்தியாவில் நடக்கும் தனது சகோதரனின் திருமணத்திற்கு கடைசி நேரத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்து பெண் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ வைரலானது.
இன்ப அதிர்ச்சி
சமீபத்தில் பிரித்தானியா சென்ற பெண் ஒருவர், இந்தியாவில் நடக்கும் தனது சகோதரரின் திருமணத்திற்கு வரமுடியுமால் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு வந்து திடீரென மணமேடையில் இருந்த மொத்த குடும்பத்திற்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஷ்ரத்தா ஷெலர் எனும் அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொளியில், அவள் தன் சகோதரனின் திருமணத்தை எதிர்பாராமல் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
instagram @Shraddha Shelar
அவரைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் தன் குடும்பத்தினரை கட்டித்தழுவி ஆர் மேடைக்கு விரைவதைக் காணலாம்.
குடும்பம் மிகவும் முக்கியம்
அவர் தனது வீடியோவுடன் வெளியிட்ட பதிவில், "நீங்கள் எங்கிருந்தாலும் குடும்பம் மிகவும் முக்கியமானது, எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்..!" என்று பதிவிட்டார்.
அவரது பதிவு, 3.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 44,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.