ஜேர்மனியில் 8 வயது சிறுவனை கொலை செய்த பெண்: ஆயுள் தண்டனை விதிப்பு
Woman sentenced to life in jail over murder of 8-year-old boy: 8 வயது சிறுவன் ஒருவனை கொலை செய்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் 8 வயது சிறுவனை கொலை செய்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை
ஜேர்மனியின் Mecklenburg-Western Pomerania மாகாணத்திலுள்ள Rostock என்னுமிடத்தில் வாழ்ந்து வந்த ஜினா (Gina H.) என்னும் பெண், ஃபேபியன் (Fabian) என்னும் சிறுவனின் தந்தையை காதலித்துவந்துள்ளார்.

தங்கள் காதலுக்கு ஃபேபியன் இடையூறாக இருப்பதாக கருதிய ஜினா, அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குளம் ஒன்றிற்கு ஃபேபியனை வரவழைத்த ஜினா, அவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
தன் குற்றத்தை மறைக்க ஃபேபியனின் உடலை எரிக்கவும் முயன்றுள்ளார் ஜினா.
பின்னர், பொலிசாரை அழைத்த ஜினா, தான் தன் நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது உயிரற்ற உடல் ஒன்றைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நாடு முழுவதும் பெருமளவில் கவனம் ஈர்த்த நிலையில், நேற்று அந்த வழக்கின் தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக ஏராளமானோர் நீதிமன்றத்தின் முன் கூடியுள்ளனர்.
இந்த வழக்கில், Rostock மாவட்ட நீதிமன்றம் ஜினாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன், 15 ஆண்டுகளுக்கு ஜினா சிறையிலிருந்து வெளியே வரவும் முடியாது.
இந்நிலையில், தான் நிரபராதி என்று தொடர்ந்து கூறிவரும் ஜினா, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.