கனடாவில் மூடப்பட்ட இருந்த மருத்துவமனை கதவு! வலியால் வாசலில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!
கனடாவில் மருத்துவமனை வாசலில் இளம்பெண் ஒருவர் பிரசவித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண்
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில், இளம்பெண் ஒருவர் மருத்துவமனை வாசலில் பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சத்தம் கேட்டதை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வந்து பார்த்த போது, தாயும், புதிதாக பிறந்த குழந்தையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
காவலர் பணி நீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் வழங்கிய உள்ள தகவலில், இரவு நேரங்களில் மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு இருக்கும் என்றும், அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்களுக்கு வேறு நுழைவாயில் கதவு உண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த தகவல் அறியாத பெண், மூடப்பட்ட கதவுக்கு அருகேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதற்கிடையில், பெண்ணுக்கு உரிய உதவியை வழங்காத பாதுகாப்பு பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறனெனினும் குறித்த தாய் மற்றும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் பற்றிய விபரங்களை மருத்துவமனை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |