ஒரே நாளில் இரண்டு ஜாக்பாட்டை வென்ற அதிர்ஷ்டசாலி பெண்!
அமெரிக்காவில் அதிர்ஷ்டசாலி பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள அதிர்ஷ்டசாலி பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்த அதே நாளில் லொட்டரியில் ஜாக்பட்டையும் வென்றார்.
மகளுன் வந்த அதிர்ஷ்டம்
பிரெண்டா கோம்ஸ் ஹெர்னாண்டஸ் எனும் 28 வயது பெண்ணுக்கு, நவம்பர் 9-ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. அவர் தனது மூன்றாவது குழந்தையை உலகிற்கு வரவேற்ற சில மணிநேரங்களில், பவர்பால் லொட்டரி போட்டியில் 100,000 அமரிக்க டொலர்களை வென்றார்.
North Carolina Education Lottery
தனது மகள் தான் தனக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாக உணர்வதாக பிரெண்டா கோம்ஸ் கூறினார்.
ஹெர்னாண்டஸ் தனது இரண்டு மகன்களின் பிறந்தநாளை எண்களை எடுக்க பயன்படுத்தியதாக கூறினார்.
லொட்டரியில் வெற்றி பெற்றதை அறிந்ததும், கண்கலங்கியதாகவும், பின்னர் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக தெரிவித்தார்.