27 வயதில் ஏழு குழந்தைகள்! பிரித்தானியா பெண்ணின் வினோதமான ஆசை
16 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த பெண் ஒருவர் 8வது குழந்தையை எதிர்பார்க்கிறாராம்.
அடுத்த குழந்தை
இங்கிலாந்தைச் சேர்ந்த 27 வயதான ஷர்னே என்ற பெண் ஒருவர் மூன்று வெவ்வேறு நபர்களுடன் ஏழு குழந்தைகளுக்கு தாயான நிலையில் எட்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறாராம்.
ஷர்னே தனது தாய்மைப் பயணம் 16 வயதில் எவ்வாறு தொடங்கியது என்பதைப் பகிர்ந்து கொண்டார். முதல் குழந்தை பிறந்தபோது, மக்கள் கிண்டல் செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
19 வயதிற்குள் நான்கு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் மேலும் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார் ஷர்னே.
விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஷர்னே தனது 27 வயதில் குடும்பம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், எட்டாவது குழந்தையைப் பெற வேண்டும் என்றும் நம்புகிறார்.
"என் குழந்தைகளுக்கு மூன்று வெவ்வேறு தந்தைகள் உள்ளனர். எனது முதல் துணையுடன் ஒரு குழந்தையும், எனது இரண்டாவது துணையுடன் நான்கு குழந்தையும், எனது தற்போதைய துணைவரான மரியோவுடன் இரண்டு குழந்தைகளும் பிறந்தன" என்று கூறினார் ஷர்னே.
மரியோவுடனான தனது உறவை எப்படித் தொடங்கினார் என்பதை பகிர்ந்து கொண்ட ஷர்னே “குழந்தைகளுக்கு டயப்பர்களைக் மரியோ கொண்டு வருவதாகவும், கேட்காமலேயே வர சில விஷயங்களைச் செய்வதாகவும்" கூறினார்.
இவர்கள் இருவரும் 2021-ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் ஷர்னேயின் தாயார் கூட அவர்களின் முடிவுக்கு ஆதரவாக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |