2 பிள்ளைகளுடன் தூக்கில் தொங்கிய தாய்! அதிர்ச்சியில் உறைந்த கணவர்
தமிழக மாவட்டம் திருச்சியில் கடன் தொல்லையால் 2 பிள்ளைகளுடன் தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதலித்து திருமணம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா (32).
இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கூலித்தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு கோகுல்நாத் (14) என்ற மகனும், சாய் நந்தினி (11) என்ற மகளும் இருந்தனர். கிருஷ்ணமூர்த்தி, கிருத்திகா தம்பதிக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது.
மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை கிருத்திகா திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் உறைந்த கணவர்
இந்த நிலையில் கிருத்திகா தனது மகன் மற்றும் மகளுடன் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
வேலை முடிந்து அதிகாலையில் வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவி மற்றும் பிள்ளைகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிஸார் இச்சம்பவம் குறித்து கூறும்போது, கிருத்திகா தனது பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |