யாருக்கும் தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: திருமணமாகி ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம், சேலத்தில் திருமணமாகி ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றுவலியால் துடித்த இளம்பெண்
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவருக்கும் , திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெகப்பிரியா (22) என்பவருக்கும் செப்டம்பர் 3 -ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 4 -ம் திகதி ஜெகப்பிரியா வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், வயிற்றுவலியோடு, வாந்தியும் சேர்ந்து வருவதால், உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவருக்கு வலி சரியாகவில்லை.
பின்பு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மருத்துவர்கள் சநதேகமடைந்து வயிற்றுவலி ஏற்படுவதற்கு காரணத்தைக் கேட்டனர்.
இளம்பெண் உயிரிழப்பு
அப்போது, ஜெகப்பிரியா மருத்துவர்களிடம், கடந்த 3 -ம் திகதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறியுள்ளார். இதனால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்த தகவலை உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார். மேலும், ஜெகப்பிரியா மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணமாகி ஒரே மாதத்தில் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என கொளத்துர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |