10ஆம் வகுப்பு மாணவருடன் முகம் சுளிக்கும் வகையில் போட்டோஷூட்! சிக்கிய தலைமை ஆசிரியை
இந்திய மாநிலம் கர்நாடகாவில் தலைமை ஆசிரியை ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி கண்டனங்களை பெற்றுள்ளது.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல கிராமத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் புஷ்பலதா.
அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வரும் இவர், மாணவர்களுடன் நெருங்கி பழகுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்வி சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவருடன் நெருக்கமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அதாவது, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். மாணவரோ அவரை தூக்கி பிடிக்கிறார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைமை ஆசிரியையின் இந்த செயல் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. அத்துடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்விவகாரம் மாணவர்களின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை புஷ்பலதாவை கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |