பிரித்தானியாவில் அழகான வீடு ஒன்றில் இறந்து கிடந்த ஆண்! கைது செய்யப்பட்டுள்ள பெண்... சம்பவ இடத்தின் புகைப்படம்
பிரித்தானியாவில் உள்ள வீட்டில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Berrow கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்றிரவு அங்குள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்ஸுக்கு போன் வந்தது.
இதையடுத்து மருத்துவ ஊழியர்கள் அங்கு சென்ற போது ஆண் ஒருவர் படுகாயங்களுடன் கிடந்தார்.
அவரை பரிசோதித்த போது உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. உயிரிழந்தவரின் சடலத்துக்கு பிரேத பரிசோதனை இனி தான் நடக்கவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிசார் கூறுகையில், எங்கள் விசாரணைகள் மிக ஆரம்ப கட்டத்தில் உள்ளன, ஆனால் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று நாங்கள் நம்புகிறோம்.
முன்னெச்சரிக்கையாக கூடுதல் ரோந்துப் பணிகள் நடைபெறும், மேலும் இந்த சம்பவம் குறித்து அக்கறை உள்ள எவரும் அந்த அதிகாரிகளுடன் பேசுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
