கிழக்கு லண்டனில் கொலை செய்யப்பட்ட 20 வயது இளம்பெண்: மூவரை கைது செய்த பொலிஸார்
கிழக்கு லண்டனில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்
கிழக்கு லண்டனின் சாட்வெல் ஹீத் லேனில் காலை 5.30 மணியளவில் பெண் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்து பொலிஸார் மற்றும் அவசர சேவை பிரிவினர் விரைந்தனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் பலத்த முயற்சிகளுக்கு பிறகும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த இளம் பெண்ணின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
3 பேர் கைது
இந்த சம்பவத்தில் 35 வயது நபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 21 மற்றும் 22 வயதுடைய இருவர் குற்றத்திற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தனி நபர்களுக்கு இடையிலான சம்பவம் என்றும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |