கனடாவில் பொதுவெளியில் தனது தலைமுடியை வெட்டி கொண்ட இளம்பெண்! காரணம் என்ன? வைரல் வீடியோ
கனடாவில் பொதுவெளியில் தலைமுடியை வெட்டி கொண்ட இளம்பெண்.
மாஷா அமினினியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் மேற்கொண்ட செயல்.
உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மாஷா அமினினியின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஈரானில் ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண் மாஷா அமினியை பொலிசார் கடுமையாக தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்தை மறுத்த பொலிஸ் தரப்பு, கைது செய்யப்பட்டபின்னர் அங்கிருந்த பெண்களுடன் இருந்தபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என தெரிவித்தனர்.
ஆனால் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஈரானிய ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நாட்டு பெண்களின் ஹிஜாப் எரிப்பு, தலைமுடி வெட்டுதல் ஆகிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் கனடாவில் வசிக்கும் பெண்களும் வான்கூவர் ஆர்ட் கேலரிக்கு வெளியே போராட்டம் நடத்தினார். அப்போது ஒரு பெண் தனது ஈரானிய அடையாள அட்டையை பல துண்டுகளாக வெட்டி, பின்னர் அமினி பொலிஸ் காவலில் மரணித்ததற்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்த தனது தலைமுடியை வெட்டி கொண்டார்.