பிடித்த உணவுக்காக 3.2 கோடி செலவு செய்த சீன பெண்: உடல் நலத்தில் உருவான நோய்கள்?
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிடித்த உணவிற்காக கிட்டத்தட்ட 32 லட்சத்தை செலவு செய்துள்ளார்.
பிடித்த உணவு
நம்மில் சிலர் நமக்கு பிடித்த ஒன்றிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சலை கொண்டு இருப்போம், அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிடித்த உணவிற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதை நிரூபித்துள்ளார்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்குசூவின் நாஞ்சிங் பகுதியை சேர்ந்தவர் பெண்மணி கோங். இவர் தன்னுடைய உணவு பிரியத்தால் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்.
Photo: SCMP composite/Shutterstock
அப்படி என்ன உணவு என்று பார்க்கிறீர்களா? அது வேறு ஒன்றும் இல்லை, சீனாவின் புகழ்பெற்ற Haidilao உணவகத்தின் காரம் நிறைந்த ஹாட்பாட் உணவு தான்.
ஆடைகள் மீதோ, மேக்கப் மீதோ மிகப்பெரிய ஆர்வம் தனக்கு இல்லை, ஆனால் உணவுகளின் மீது எனக்கு மிகப்பெரிய பிரியம், என்னுடைய பொழுதுபோக்கே சாப்பிடுவது தான்.
அதிலும் குறிப்பாக Haidilao உணவகத்தின் ஹாட்பாட் என்றால் கொல்லைப் ப்ரீயம் என கோங் தெரிவித்துள்ளார்.
இதற்காக இவர் கடந்த 9 மாதத்தில் மட்டும் 32 லட்சத்தை செலவு செய்துள்ளார்.
Photo: The Paper
இவரது உணவு பிரியத்தை நன்கு அறிந்த Haidilao ஹோட்டல், கோங் ஒரு முறை சீனாவின் வடக்கு மாகாணத்திற்கு செல்ல அதிகாலையில் விமானம் இருந்த போது, ஹோட்டலிலே தங்கி செல்ல அனுமதித்துள்ளனர்.
அளவுக்கு மீறினால் நஞ்சு
பிடித்த உணவு என்பதற்காக அளவுக்கு அதிகமாக எநத உணவை எடுத்துக் கொண்டாலும் அது உடலுக்கு தீங்கையே விலவிக்கும். அந்த வகையில் பெண்மனி கோங் முன்பை விட 13.5 கிலோ எடை அதிகரித்துள்ளார்.
ஹாட்பாட் சாப்பிட்டு சாப்பிட்டு அவரது உடலில் லித்திக் ஆசிடின் அளவும் அதிகரித்துள்ளது. கோங்-கின் கதை சமூக வலைதளத்தில் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |