மிளகாய் தூள் வீசி தங்க நகைகளை திருட முயன்ற பெண்: புகார் அளிக்க மறுத்த கடை உரிமையாளர்
குஜராத்தில் நகைக் கடையில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சி உரிமையாளரின் சாமர்த்தியத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளை முயற்சி முறியடிப்பு
நவம்பர் 3ம் திகதி மதியம் 12.30 மணியளவில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றுக்குள் முகத்தை மூடியவாறு பெண் ஒருவர் நுழைந்துள்ளார்.
பின், திடீரென அந்த பெண் கடை உரிமையாளரின் கண்களை குறிவைத்து கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
In Ahmedabad, a woman tried to rob a jewelry store owner by throwing red chili powder into his eyes.
— 🦋 KOMAL SINGH🦋 💯 Follow Back (@Singh_Komall) November 7, 2025
Even after the chili got into his eyes, the owner stood strong.
#IPL2026 #Kumbha #Fourthnattawat pic.twitter.com/rAqmVDlVpo
அதிர்ஷ்டவசமாக மிளகாய் பொடி கடை உரிமையாளரின் கண்களில் படவில்லை, அதே சமயம் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்ட கடை உரிமையாளர், அதிலிருந்து தப்பி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற பெண்ணை 20 முறை வேகமாக அறைந்துள்ளார்.
அத்துடன் அவரை கவுண்டரில் இருந்து வேகமாக வெளியே இழுத்து சென்று தள்ளியுள்ளார்.
புகார் அளிக்க மறுத்த கடை உரிமையாளர்

இந்த பரபரப்பான சம்பவம் குறித்து தங்க நகைக்கடை உரிமையாளர் பொலிஸாரிடம் புகார் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.
இருப்பினும் சம்பவத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளியான பெண்ணை தேடும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |